செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு மாதம் இன்று முதல் ஆரம்பம் : சிகரட் , மதுபான விலைகள் அதிகரிக்கப்படும்

சிகரட் மற்றும் மதுபான விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் அடுத்த மாதம் 8ம் திகதி வரை நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு இணையாக இன்று முதல் அவற்றின்  விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் ஒழிப்பு மாதம் தொடர்பான அறிவிப்பை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுக்கவுள்ளதுடன் இந்த மாத காலப்பகுதியில் நாடு பூராகவும் மக்களையும் மாணவர்களையும் தெளிவு படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பொலிஸாரினால் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.