போதைப்பொருள் தேடுதலுக்கு சிறைச்சாலைகளுக்குள் மோப்பநாய்களை ஈடுபடுத்த தீர்மானம்
சிறைச்சாலைகளுக்குள் போதைவஸ்து தேடுதலுக்கு மோப்பநாய்களை பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக பொலிஸாரிடம் உதவி கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பொலிஸாரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக கொழும்பு , மகர மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த சிறைச்சாலைகளிலேயே அதிகளவு போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க சுட்டிக்காட்டினார்.
n10




