செய்திகள்

போதைப் பொருளை ஒழிக்க பலமான கருத்தாடல் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் : யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு

முழு மக்கள் சமூகத்தையுமே அழிவுக்குட்படுத்தி நாட்டு மக்களை வறுமையில் தள்ளும் போதைப்பொருள் பாவனையைத் தவிர்ப்பது தொடர்பாக பலமான மக்கள் கருத்தை சமூகமயப்படுத்துவதற்கு எல்லோரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற நாடு என்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் எட்டாவது கட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தை மையப்படுத்தியதாக இன்று )09) முற்பகல் யாழ் திறந்த விளையாட்டரங்கில் நடைபெற்றத இந்த நிகழ்ச்சித் . திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போதைப்பெருளில் இருந்து விடுதலை பெற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பங்களித்துஇ நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமான பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அங்கிருந்த எல்லோரிடமும் கேட்டுக்கொண்டார்.
யுத்தத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கும் வடக்கில் இன்று இருக்கும் மிகவும் பாரதூரமான சமூகப் பிரச்சினையாக போதைப்பொருள் பிரச்சினை மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ இப்பிரச்சினையிலிருந்து இந்த மக்களை விடுவிப்பதற்காக எல்லோரும் ஒன்றிணைய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். 2015ஆம் ஆண்டு யாழ் மாவட்ட மக்கள் போதைப்பொருள் பாவனைக்காக சுமார் 2206 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளனர்.
வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளின்போது கேரள கஞ்சா 194 கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்இ இது தொடர்பில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இருபது வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். கடுமையான சட்டதிட்டங்களைக்கொண்டு மட்டும் இந்த போதைப்பொருள் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக சமூகத்தில் இதனைப்பார்க்கிலும் பலமாக விமர்சனங்கள் எழுமானால் இந்த வியாபாரத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.4 6 7

-(3)