போதையில் வாகனம் செலுத்துவோரின் தண்டப்பணத்தை 50,000 ரூபா வரை அதிகரிக்க யோசனை
போதை வஸ்துகளை பாவித்துவிட்டு வாகனங்களை செலுத்துவோருக்கான தண்டப்பணத்தை 50,000 ரூபா வரை அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்னவே இவ்வாறு தெரிவித்துள்ளார். ,
தற்போத மது போதையில் வாகனம் செலுத்துவதற்கு தவிற வேறு பேதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனம் செலுத்துவதற்கு சட்டத்தின் பிரகாரம் குற்றமாக கருதப்படுவதில்லைல. இதனால் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதேவேளை மது போதையில் வாகனம் செலுத்துவதற்கு 25,000 தண்டப்பணம் அதிகரிக்கப்படுமென்றால் மற்றைய போதைவஸ்துகளை பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கான தண்டப்பணத்தை 50,000 ரூபா வரை அதிகரிக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




