செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிற்சங்க தலைவரை காணவில்லை

கொழும்பு – கோட்டை பகுதியில் இடம்பெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தொழிற்சங்க தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மேன்பவர் சேவையாளர்கள் சங்க உபத்தலைவராக செயற்பட்ட எம்.எஸ். மங்கள என்பவரே காணாமல் போயுள்ளார். கொட்டாவை பகுதியில் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போயுள்ளதாக, அவரது மனைவியால் பிலியந்தலை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சத்தியாகிரக போராட்டம் இடம்பெறும் கொழும்பு கோட்டை காவற்துறை பிரிவிற்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய விசாரணைகள் இடம்பெறுகின்றன. -(3)