போராட்டத்தை கைவிட்ட சிம்பு? காரணம் என்ன
நடிகர் சிம்பு சல்லிக்கட்டுக்காக உடனே குரல் கொடுத்தது அனைவருக்கு தெரியும். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.
அவ்வப்போது ஆலோசனைகளை இளைஞர்களுக்கு கொடுத்து வருகிறார். நேற்று கூட அவரின் வீட்டின் முன் பலரும் கூட இரவு முழுவதும் போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
தற்போது அவர் தனது போராட்டத்தை நிறுத்தி கொண்டதாக சொல்லப்படுகிறது. காரணம் என்னவெனில் ஒட்டு மொத்த ஊடகத்தின் பார்வையும் மெரினாவில் போராடும் இளைஞர்கள் மீது தான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானம்.
தன்னுடைய ஆதரவு தொடர்ந்து அவர்களுக்கு இருக்கும் என அவர் கூறியுள்ளார்
N5




