போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை: சரத் பொன்சேகா உறுதி
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு அனுமதியில்லை எனவும், தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அனுமதிப்பதற்கு விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அனுமதிக்கவும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளவும் ஜனாதிபதியும் பிரதமரும் இணங்குவதாகவும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
எவ்வாறெனினும் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பினை அரசாங்கம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய இலங்கை அரசியல் சாசனத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுளார்.
R-06




