செய்திகள்

‘போர்ட்சிற்றி பொருளாதார வலயம்’ ஆணைக்குழுவுக்கு எதிராக ஐ.தே.க நீதிமன்றத்தில் மனு

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் அமையவுள்ள பொருளாதார வலயத்திற்கான ஆணைக்குழுவை அமைக்கும் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இன்று முற்பகல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் அவசரமாக குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையிலானது என்று குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி மனுவை தாக்கல் செய்துள்ளது.

மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தில் அமையவுள்ள பொருளாதார வலயம் தொடர்பான ஆணைக்குழுவின் அதிகாரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

குறித்த ஆணைக்குழு ஊடாக இலங்கையின் இறைமையை மீறப்படும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. -(3)