செய்திகள்

போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முயன்ற இரு தமிழ் இளைஞர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்ல முயற்சித்த இரண்டு தமிழ் இளைஞர்கள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 31 மற்றும் 28 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை ஓமான் எயார்வேய்ஸ் விமானத்தில் பயணித்து, இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்வதற்கு இவர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். இதன்போது இவர்களின் செங்கன் விசாவில் குளறுபடி இருப்பதாக அவதானித்த விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் கைது செய்து குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
இந்த இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் தங்கள் உண்மையான கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்றிருந்தபோதிலும் போலியான விசாவை ஒட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
பிரான்ஸில் இருக்கும் தங்கள் உறவினர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் பயண முகவர் ஒருவர் இந்த விசாவை ஏற்பாடு செய்து தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள்  இரண்டு பேரவையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
n10