போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி
சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் சத்யா படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார். தெலுங்கில் வெளியான ஷணம் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. குழந்தை கடத்தலை பின்னணியாகக் கொண்ட திரில்லர் கதை இது.
இந்த தலைப்பு கமலின் படம் என்பதால் கமல் ஸ்டைலில் முத்தக்காட்சி ஒன்றை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வைத்திருந்தார். ஆனால் முத்தகாட்சிக்கு சிபிராஜ் மறுத்துவிட்டார். சிபிராஜுக்கு அவரது கேரியரில் இந்த படம் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.(15)




