செய்திகள்

போலீஸ் வேடத்தில் ஸ்ரீபிரியங்கா

அகடம், கங்காரு, வந்தா மல, ஸ்கெட்ச் படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா அடுத்து,’மிக மிக அவசரம்’ படத்தில் நடிக்கிறார். நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடித்து வந்த ஸ்ரீபிரியங்கா இதில் போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார். படம்பற்றி இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறும்போது,’டைட்டிலுக்கு ஏற்ப கதையும் மாறுபட்டதாக இருக்கும். பெண் காவலராக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். அரீஷ்குமார் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஹீரோ, ஹீரோயின் இருந்தாலும் ஒருகாட்சியில் கூட இருவரும் இணைந்து நடிக்கவில்லை. கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம் பட இயக்குனர் ஜெகநாத் கதை எழுதி உள்ளார். இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வி.சத்தியமூர்த்தி படத்தை வெளியிடுகிறார். இதில் லிங்கா, அரவிந்த், ஈ.ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, விகே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோரும் நடிக்கின்றனர்’ என்றார்.(15)Pichuva-Kaththi-Audio-Launch-Event-Stills-015-740x431