மகள் படத்துக்கு பின்னணி குரல் தரும் ரஜினி …..!
தனுஷ் நடித்த 3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் அடுத்து ‘சினிமா வீரன்’ படம் இயக்குகிறார்.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பற்றிய டாக்குமெண்ட்ரி படமாக உருவாகிறது.
தமிழ் சினிமா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இது அர்ப்பணிக்கப்படுகிறது. இப்படத்துக்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்க சம்மதித்திருக்கிறார்.
பெரும்பாலான ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் ரஜினி பணியாற்றி இருப்பதால் அவர்களுடன் நெருக்கமாக ரஜினி பழகி உள்ளார்.
அவர் குரல் தருவது பொருத்தமாக இருக்கும் என்று பட குழுவினர் கூறினர். தனுஷ் தயாரிக்கிறார். கவிஞர் கபிலன் பாடல் எழுதுகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க பேச்சு நடக்கிறது.
N5




