செய்திகள்
மகிந்தவிடமிருந்து இன்று விசேட அறிவிப்பு வெளிவரும்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசாங்கத்திற்கு எதிரான பொதுக் கூட்டம் இன்று இரத்தினப்புரி நகரில் நடைபெறவுள்ளது.
”போராட்டத்திற்கு உயிரூட்டும் மக்கள் சக்தி” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதன்படி இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இங்கு மகிந்தவின் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




