செய்திகள்

மகிந்தவிடமும் இரகசியம் இருக்கிறதாம்

என்னிடமும் கூறுவதற்கு பல விடயங்கள் உள்ளன. அவற்றை கூறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளர்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சிலர் நான் முன்கூட்டியே தேர்தலுக்கு சென்றதற்கு பொருளாதார நெருக்கடியே காரணம் என்கின்றனர். அப்படியில்லை. அவ்வாறு பொருளாதார நெருக்கடி இருந்திருந்தால் பதவியை துறந்து வீட்டுக்கு சென்றிருப்பேன். சிலர் கூட இருந்து கழுத்தறுத்தமையினாலேயே நான் தோற்றேன். எவ்வாறாயினும் நான் ஶ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டுப் போக மாட்டேன். என்னிடமும் கூறுவதற்கு பல விடயங்கள் உள்ளன. அவற்றை கூறப்போவதில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தன்னிடம் இரகசியங்கள் பல இருப்பதாகவும் அதனை புதிய கட்சி அமைக்கப்படும் போது கூறுவேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  -(3)