மகிந்தவின் ஆட்சி கவிழ்ப்பு கருத்துக்கு பிரதமர் பதில்
இந்த வருடத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.
இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற புதுவருட நிகழ்வின் போது ஊடகவியலாளர்களினால் மகிந்த ராஜபக்ஷவின் கருத்து தொடர்பாக பிரதமரிடம் எழுப்பப்பட்டது.
இதன்போது ”நானே இப்போது பிரதமர். அடுத்த வாரமளவில் நான் சுவிஸ்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளேன். அப்போது வேண்டுமென்றால் மகிந்த கூறுவது போல் அதற்கு முயற்சித்து பார்க்கலாம்”. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




