செய்திகள்

மகிந்தவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
http://www.mahindarajapaksa.lk என்ற முகவரியில் இந்த உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் , சிங்களம் , ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இந்த இணையத்தளத்தின் உள்ளடக்கங்கள் காணப்படுவதுடன் அதில் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கான பதில்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)