மகிந்தவின் கட்சியுடன் இணைய திட்டமிடும் 11 கட்சிகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல பொது ஜன பெரமுன கட்சியுடன் இணைவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சிலவும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்தவை மறைமுக தலைவராக கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸை தற்காலிக தலைவராக கொண்டு குறித்த கட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சியுடன் கூட்டு சேர்வது தொடரபாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் அதனுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)




