செய்திகள்

மகிந்தவின் தலைமைப் பதவி யாருக்கு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக புதியவர் ஒருவர் அறிவிக்கப்படவுள்ளார்.

கட்சிக்கு வலுவான தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் அந்த நியமனம் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சமகால தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பிற்கமைய, மகிந்த ராஜபக்ச நீக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன்படி ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த வேறு ஒருவர் கட்சியின் தலைவராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

-(3)