செய்திகள்

மகிந்தவின் புதிய கட்சி 2ஆம் திகதி உதயம் : சின்னம் தாமரை மொட்டு?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலமையிலான புதிய கட்சி தொடர்பான தகவல்கள் எதிர்வரும் 2ஆம் திகதி வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வீடியோவொன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் கட்சியின் சின்னமாக தாமரை மொட்டு அமையுமெனவும் எதிர்வரும் 2ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் மாத்தறை வெலிகம பகுதியில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)