மகிந்தவின் மறைத்துவைக்கப்பட்டுள்ள சொத்துக்களை கண்டுபிடிக்க அமெரிக்கா, இந்தியா உதவி
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை சேர்ந்தவர்களால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டுள்ள பெருமளவு பணத்தை கண்டுபிடிப்பதற்கு இந்தியாவும்,அமெரிக்காவும் உதவுவதாக அதிகாரிகள் இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்சிற்கு தெரிவித்துள்ளனர்.
ராஜபக்ச அரசாங்கத்தினை சேர்ந்தவர்களால் துபாய் வங்கியொன்றில் மறைத்துவைக்கப்பட்டுள்ள 2 பில்லியன் டொலர் பணத்தை கண்டுபிடித்துள்ளதாக கொழும்பில் அதிகாரிகள் எக்கனமிக்ஸ் டைம்சிற்கு தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான பணம் காணப்பட்டது குறித்தும் தேர்தலுக்கு பின்னர் குறிப்பிட்டளவு பணத்தை எடுத்துள்ளமை குறித்தும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
குறிப்பிட் பணம் குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக இந்தியாவினதும், அமெரிக்காவிளதும் உதவியை இலங்கை நாடியுள்ளது, இரு நாடுகளும் இதற்கு உதவுகின்றன என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியாலும் அவரது குடும்பத்தினாவும் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தில் இருபது வீதமே துபாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் இதனை மறுத்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்க உதவுமாறு கோரியிருந்தார்




