மகிந்தவுக்கான பாதுகாப்பு பிரிவில் இருந்த படையினர் முற்றாக வாபஸ்: அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவம் முழுமையாக இன்று திங்கட்கிழமை காலை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மகிந்தவின் ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கின்றது.
மகிந்தவின் பாதுகாப்புக்காக 102 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இன்று காலை வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
மகிந்தவுக்கான இராணுவப் பாதுகாப்பு வாபஸ்பெறப்படும் என ஏப்ரல் மாத முற்பகுதியில் அரசாங்கம் அறிவித்திருந்தது. இருந்தபோதிலும், பின்னர் மகிந்தவின் பாதுகாப்புக் கடமையிலுள்ள 102 இராணுவத்தினரும், 103 பொலிஸாரும் தொடர்ந்தும் பணியிலிருப்பார்கள் என அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இன்று காலையில் மகிந்தவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 102 இராணுவத்தினரும் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
R-06




