மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் பொதுபல சேனா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
அண்மையில் கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான நேர்காணலின் போது பொதுபல சேனாவை அமைச்சர் ராஜித சேனாரட்ன , பாட்டலிசம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினருடன் தொடர்புகளை கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே அவருக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்படி தற்போது வழக்கு தொடருவது தொடர்பாக பொதுபல சேனாவினர் சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருவதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் டிலந்தவிதானகே தெரிவித்துள்ளார். -(3)




