செய்திகள்

மகிந்த அணியின் புதிய முன்னணி 8ஆம் திகதி உதயம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் புதிய முன்னணியை அறிவிக்கும் பொதுக் கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி இரத்தினப்புரி நகரில் நடைபெறுமென பாராளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார்.
”போராட்டத்திற்கு உயிருட்டும் மக்கள் சக்தி” என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டம் நடக்குமெனவும் இதன்போது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)