செய்திகள்

மகிந்த அணியின் 2வது நாள் யாத்திரை உத்துவன்கந்தவிலிருந்து ஆரம்பம்

மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 2வது நாள் பாதயாத்திரை இன்று காலை 9 மணியளவில் உத்துவன்கந்த பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

நேற்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு முன்னாலிருந்து மவானெல்ல நகர் வரை முதல் நாள் பேரணியை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதும் கண்டி நகருக்கிலிருந்து ஆரம்பிப்பதற்கும் மற்றும் மாவனல்ல நகருக்குள் நுளைவதற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் போராதனை பகுதியிலிருந்து பேரணி ஆரம்பமாகி மாலை 4 மணியளவில் உத்துவன்கந்த பகுதியில் பேரணி முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி இன்று உத்துவன்கந்தவிலிருந்து வரகாபொல வரை இந்தப் பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பேரணி எதிர்வரும் 1ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
R-06