செய்திகள்

மகிந்த அரசாங்கத்தில் நிர்மான கொள்ளை : நல்லாட்சி அரசாங்கத்தில் விற்பனை கொள்ளை

மகிந்த அரசாங்கம் நிர்மான பணிகளில் கொள்ளையடித்ததை போன்று தற்போதைய ரணில் – மைத்திரி அரசாங்கம் அந்த நிர்மானங்களை விற்று கொள்ளையடிப்படிதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் , கொழும்பு துறைமுகம் , திருகோணமலை பெற்றோலிய நிலையம் என சகலவற்றையும் வெளிநாடுகளுக்கு விற்கும் நடவடிக்கைகளிலேயே இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் நிர்மானங்களை மேற்கொண்டு கொள்ளையடித்தனர் இவர்கள் அவற்றை விற்று கொள்ளையடிக்கின்றனர். இதுவே தற்போது நடக்கிறது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)