செய்திகள்

மகிந்த – மைத்திரி இணைவு நடக்காது : ஜீ.எல்.பீரீஸ்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இணைந்து போட்டியிட மாட்டார்கள் என ஒன்றிணைந்த எதிரணியின் புதிய கட்சியான பொது ஜன பெரமுன தலைவர் கலாநிதி ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நுகேகொட நகரில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைவோம் என்பதனை உறுதிசெய்துக்கொண்டவர்கள் இப்போ மகிந்தவிடம் வந்து சேர்ந்து செயற்படுவோம். என்கின்றானர். நாம் ஒருபோதும் இரவு விழுந்த குழியில் பகலில் விழப் போவதில்லை. -(3)