செய்திகள்

மக்களின் சந்தோசத்தை கெடுக்க எந்த குழுவுக்கும் அரசாங்கம் இடமளிக்காது : ஜனாதிபதி

மக்களின் சந்தோசம் மற்றும் சுதந்திரத்தை கெடுக்கும் எந்தவொரு குழுவுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்படி அவ்வாறு சந்தோசத்திற்கு இடையூராக இருக்கும் பாதாள குழுக்களை ஒழிக்க நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு அபயாராம் விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் மா அதிபருடனும் தென் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களுடனும் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதாள குழுக்களை ஒழிப்பது  தொடர்பாக நடவடிக்கையெடுக்குமாறு தெரிவித்திருந்தேன். அதேபோல் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை இணைந்து பாதாள குழுக்களையும் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களையும் ஒழிக்க தேவையான மற்றும் சட்ட ரீதியாக செய்ய வேண்டியவற்றை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
நாட்டில் சந்தோசமாகவும் , சுதந்திரமாகவும் வாழும் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பாதாள குழுக்கள் உள்ளிட்ட எந்தவொரு குழுவுக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இடமளிக்க மாட்டோம். என்பதனை திட்டவட்டமாக கூறிக்கொள்கின்றேன்.
n10