செய்திகள்

மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படுகின்றது : தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குற்றச்சாட்டு

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது இழுத்தடித்து வருவது மக்களின் உரிமைகளை மீறும் நடவடிக்கையே என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது பற்றி குறிப்பிட்ட அவர்: எவ்வாறாயினும் இந்த வருடத்தில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் இடம்பெறமாட்டாது என்றும் இந்த தாமதம் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதியிலேயே எல்லை மீள் நிர்ணய விடயங்கள் முழுமையாக நிறைவு பெறும் என குறிப்பிட்ட அவர் அடுத்த ஏப்ரலில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் இடம்பெறலாம். என்றும் அத்துடன் அடுத்த வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். -(3)