மக்களின் நலனுக்காக பாத யாத்திரை போராட்டம் நடத்தப்படவில்லை!
மக்களின் நலனுக்காக பாத யாத்திரை போராட்டம் நடத்தப்படவில்லை என புரவசி பலய அமைப்பின் இணை அழைப்பாளர் சந்திரசேன விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை பிரதான தபால் நிலைய கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இந்த பாத யாத்திரைக்குச் சென்றவர்கள் நாட்டின் ஜனநாயகத்திற்காக சென்றதாக எமக்குத் தெரியவில்லை.
ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மூடி மறைத்துக்கொண்டு தங்களது வாழ்க்கையை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே பாத யாத்திரை நடத்தப்பட்டது.
தங்களை பாதுகாத்துக் கொள்ளும் இறுதி முயற்சியாக இந்த பாத யாத்திரை உத்தியை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகள் ஏற்கனவே நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த விசாரணகைளை இடைநிறுத்தவே முயற்சிக்கப்படுகின்றது. எனவே இந்த விடயத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
ஒவ்வொருவராக உள்ளே செல்வதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு பாத யாத்திரை நடத்துகின்றனர்.
கிடைத்துள்ள சுதந்திரத்தை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
N5




