செய்திகள்

‘மக்களுக்கு தேவை வீடுகளே தவிர, இரும்பு கூடுகள் அல்ல’: சம்பந்தன், சுவாமிநாதன் சூடான விவாதம்

“தற்போதைக்கு மக்களுக்கு தேவை வீடுகளே தவிர, இரும்பு கூடுகள் அல்ல” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், மீள்குடியேற்ற அமைச்சர் டீ..எம்.சுவாமிநாதனிடம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா இந்த கேள்வியை எழுப்பினார். எனினும் இந்த கேள்விக்கு மீள்குடியேற்ற சிறைச்சாலைகள் துறை அமைச்சர் இன்று பதில் வழங்க முடியாது என்று கூறியதுடன், மாற்றுத் திகதி ஒன்றையும் கோரினார்.

இதற்கிடையில் வடக்கு கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்து உரையாற்றினார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் வடக்கு பிரச்சினைகள் எந்த அளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு எந்த அளவு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன? மாறாக சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு எந்த அளவு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன? என்பதை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நீதி எந்த அளவுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் இந்த நிலையை தொடர்ந்தும் இடம்பெற வாய்ப்பு வழங்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து உரையாற்றிய யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், தமிழர்களின் காணிகளை பிடித்து வைத்துள்ள இராணுவத்திடம் விடுக்கப்படும் கோரிக்கைகள் கணக்கில் கொள்ளப்படாதவையாக இருப்பதாக குற்றம் சுமத்தினார்.

இந்த விவாதத்தின் போது அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் 65 ஆயிரம் வீடுகள் தொடர்பாக கருத்துரைத்த போது, எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் குறுக்கிட்டு, தமது கருத்தை வெளியிட்டார்.

தற்போதைக்கு மக்களுக்கு தேவை வீடுகளே தவிர, இரும்பு கூடுகள் அல்ல” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், மீள்குடியேற்ற அமைச்சர் டீ..எம்.சுவாமிநாதனிடம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றது.
R-06