செய்திகள்

மக்களைச் சந்திப்பதற்கு எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாம் ஒருபோதும் அஞ்சியது கிடையாது – இ.தொ.கா

ஹெரமிட்டிகல தோட்டத்துக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளச் செல்வதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு முன்பதாக குறித்த தோட்டத்துக்கு அண்மையிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் எமது பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்காக பாதையை உடைத்து வாகனம் செல்ல தடை செய்ததாகவும் அதனை முறியடித்து வெற்றிகரமாக மக்கள் சந்திப்பை நடத்தியதாகவும் இதொகா அறிவித்துள்ளது.

எமது பிரசாரத்தை தடுக்க எடுத்த முயற்சிகளை தோற்கடித்து மறுபக்கத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வரவழைத்து மக்களை சென்று சந்தித்ததுடன், கடந்தகாலத்தைவிட எதிர்காலத்தில் அதிகமான சேவைகளை இ.தொ.கா முன்னெடுக்குமென மக்களிடம் தெரிவித்தோம்.“ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம் மக்களைச் சந்திப்பதற்கு எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாம் ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்றும் கடந்தகாலத்தைவிட எதிர்காலத்தில் அதிகமான சேவைகளை இ.தொ.கா முன்னெடுக்குமென மக்களிடம் தெரிவித்தோம்.“ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)