“மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு மஹிந்த”
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் தொடர்பாடல்களுக்கான அலுவலகம் பத்தரமுல்லையில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ கூறியதாவது;
வௌிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைத்துள்ளதாக கூறப்படும் 18 பில்லியன் டொலர் பணத்தை தேடித் தரும் வரை நான் பார்த்து கொண்டிருக்கிறேன். 18 பில்லியன் டொலர் பணத்தை முடியாவிட்டால் ஒரு பில்லியன் பணத்தையாவது தேடித் தருமாறு தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.இதுபோன்று நாமல் ராஜபக்ஷவிற்கும் வௌிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணம் வைத்துள்ளதாக கூறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் ஊடக சுதந்திரம் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்திலும் ஊடகவியலாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதாக கூறினார்.ஜனவரி 08ம் திகதியின் பின்னர் கட்சியின் தலைமைத்துவத்தையும் விட்டுக் கொடுத்ததாக கூறிய அவர் மக்கள் இன்னும் தன்னைத் தேடி வருவதாகவும் “மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு மஹிந்த” என்றும் கூறினார்.
n10.




