செய்திகள்

மக்கள் சேவை மண்குழியிலே!

 

குள்ள நரிகள் கூட்டம் சேர்ந்தன
நல்ல வேடமிட்டு நாசம் செய்தன- அதை
மெல்ல சிங்கமும் மோப்பம் பிடித்தது
கள்ள தனமாக அவற்றுடன் கட்சி சேர்ந்தது

மக்கள் பணத்தை மடியில் நிரப்பிடின்
சிக்கல் சிக்கலே எனசட்டம் உரைத்து
தக்க தண்டனையாய் பதவி பறிக்கவே
வைத்த குழுவும் பரிந்துரை செய்தது

பக்க பலமாய் நியாயம் இருந்திட
பாதிக்கப் பட்டோருக்கு பரிகாரம் தேடி
மிக்க சிரத்தையாய் பதவி விலக கேட்கவே
பிக்கல் பிடுங்கலால் சபை அமளிப்பட்டது

அக்கப் போரிலே ஆதாயம் தேடியே
செக்கு மாடுகள் போல் சிறுநரிக்கூட்டம்
கையொப்பங்களுடன் சேர்ந்த இடமோ
சிங்கத்தின் குகையே சிங்கத்தின் குகையே

வெக்(ட்)கம் இல்லயாம் மானம் இல்லையாம்
மக்கள் சேவை இப்போது மண்குழியிலாம்
இத்தருணத்திக்காய் சிங்கம் அலையவே
நக்கும் நாய்கள்போய் காலில்விழுந்தனவாம்

தப்பு செய்திடில் தட்டிக் கேட்டிட
மக்கள் எழுவதைக் காணவில்லையா?
எப்ப திருத்துவார் குழி பறிப்பதை;
உப்பிட்டவருக்கே துரோகம் செய்வதை!!

                                                                                                                      -பிறேமலதா பஞ்சாட்சரம்