செய்திகள்
மக்கள் சொத்துக்களை கொள்ளையடிப்போர் மறு பிறவியில் நாயாகவும் , காக்கையாகவுமே பிறப்பர் : ஜனாதிபதி
மக்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் அடுத்த பிறப்பில் நாய் மற்றும் காக்கையாக பிறப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நிஷங்க மன்னின் கல்வெட்டை அரச நிறுவனங்களுக்கு முன்னாள் வைத்தால் சிறந்த பயனை அடையலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் அடுத்த பிறப்பில் நாய்களாகவும் காக்கைகளாகவுமே பிறப்பர் என நிஷங்க மல்லனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விடயம் இந்த காலத்துக்கும் பொறுந்தும். இதனால் அந்த கல்வெட்டை அரச நிறுவனங்களுக்கு முன் வைத்தால் சிறந்த பலனை பெறலாம் என நம்புகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.




