செய்திகள்

மக்கள் புரட்சி

நல்லூரில் நடந்தது தியாகத்தின் வேள்வி
நடந்த வேள்வியிலே ஆகுதியாகியது அவனாவி
பன்னிரு நாட்கள் பசி தீயினில் வேகி -இந்திய
அரசிடம் கேட்டான் எமக்கொரு நீதி !

ஒவ்வொரு நாட்களும் அணுவணுவாய் உருகி
போனதே போனதே அவனுடல் கருகி
தமிழரின் விழிகளில் கண்ணீரின் அருவி -அன்று
மடைதிறந்தோடியது கடலாகப் பெருகி !

நீரின்றி உணவின்றி தாங்குமா தேகம்? அவன்
நிலையினைப் பார்த்தும் காத்தனர் மௌனம்
காந்திய நாட்டிடம் அகிம்சையின் யாகம் -தோற்றதால்
வெடித்தது மக்கள் புரட்சியின் பூகம்பம்

நீதியின்றி திலீபனை கொன்றழித்த பாவம்
நெஞ்சிலே தூண்டியது தன்மான வேகம்
போரெழுந்து பகைசரிய போனது இந்தியப்படை மானம் -நாட்டைவிட்டு
போகவைத்து கைதட்டி சிரித்தது காலம் !

-பிறேமலதா பஞ்சாட்சரம்

https://www.youtube.com/watch?v=XB1CQiQ6ITk