செய்திகள்

மக்கள் மீது மேலும் வரிச் சுமைகளை சுமத்தும் வரவு செலவே : அனுரகுமார

மக்களை மேலும் வரிச்சுமைக்குள் தள்ளும் வரவு செலவு திட்டமாகவே 2017 வரவு செலவு திட்டம் காணப்படுவதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தான் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பல்வேறு வழிகளில் மக்கள் மீது மேலும் வரிச் சுமைகளை அதிகரித்துள்ளது. இது மக்கள் மீது மேலும் வரிச்சுமைகளை அதிகரிக்கும் வரவு செலவு திட்டமே என அவர் தெரிவித்துள்ளார். -(3)