செய்திகள்

மக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள விசேட வேலைத்திட்டம்!

வவுனியா , மன்னார் , முல்லைத்தீவை சேர்ந்த மக்கள் தமது அவசரத் தேவைகள், முறைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கும் உள்ளூராட்சி அதிகாரிகளிடம் இருந்து அதற்கான துரிதமான பதிலை பெற்றுக்கொள்வதற்குமான பொறிமுறை ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் பணிப்புரையின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள பொறிமுறையின் மூலம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் குறைகள் ஆளுநரின் செயலகத்தினால் கேட்டறியப்படும் என ஆளுநர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் செயலகம் – வட மாகாணம், பழைய பூங்கா, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். என்ற  முகவரிக்கு அல்லது hgnpdisasteror@np.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு குடிமக்கள் தமது தேவைகள் தொடர்பில் தெரிவிக்க முடியும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களால்  ஆளுநர்  செயலகத்திற்கு வழங்கப்படும் அனைத்து முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு  நவம்பர் மாத நடுப்பகுதி அல்லது அதற்கு முன்னர் பதில் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

-(3)