செய்திகள்

மங்களாராம விகாராதிபதி பிணையில் விடுதலை

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரட்ன தேரர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட பேரணியொன்று தொடர்பாக இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன்படி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது 50,000 ரூபா பண பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் இரண்டு சரீரப்பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரை எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. – (3)