மங்கள சமரவீர என்னிடம் விரைவில் ஓடிவருவார் : கோதாபய
அரசாங்க பணத்தில் தனது மகன் அமெரிக்காவில் வாடகை வீட்டில் வசித்ததாக தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோதாபயவின் மகன் அரசாங்க பணத்தில் அமெரிக்கா லோஸ்ஏஞ்சல் நகரில் வாடகை வீடொன்றில் வசித்தததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இன்று கொழும்பில் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்துள்ள கோதாபய ”ஏன் வாடகைக்கு அங்கு வீட்டை எடுக்க வேண்டும். இலங்கை வரலாற்றில் செயற்திரனில்லாத வெளிவிவகார அமைச்சர் இவரே, என்ன செய்தாலும் இறுதியில் என்னிடமே ஓடிவர வேண்டும். இதற்கு முதல் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளுமாறு என்னிடம் ஓடிவந்தே கூறினார். அதேபோல் எதிர்காலத்திலும் வரவேண்டி வரும்” என அவர் தெரிவித்துள்ளார். -(3)




