மட்டக்களப்பில் இறக்கும் மாடுகள்: பரிசோதனைகள் ஆரம்பம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த நாட்களாக அதிகளவிலான மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாடுகளுக்கு இடையே பரவும் ஒருவகை நோயினால் இவை இறக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழக்கும் மாடுகளின் மாதிரிகள் தொடர்பிலான 10 நாட்களுக்குள் கிடைக்கும் என மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது பல கிராமங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏற்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒரு இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்ற போதிலும் சுமார் 25,000 தடுப்பூசிகளே மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன.
பொருளாதார நெருக்கடி காரணமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்ட பிரச்சினைகளே இதற்கான காரணம்.
இந்நிலையில், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப 18,000 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. அம்பாறை மாவட்டத்திற்கு 12,000 தடுப்பூசிகள் கிடைத்துள்ள போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அவசரத் தேவை நிலவுவதனால், அந்த 12,000 தடுப்பூசிகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பின்னர் கிடைக்கும் தடுப்பூசிகள் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், இறக்கும் மாடுகளை உடனடியாக புதைக்க வேண்டும் என சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இறந்த கால்நடைகளை உடனடியாக புதைப்பதனால், சுகாதார பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று எருமை மாடு ஒன்றின் விலை இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என்பதனால், சாதாரணமாக ஒருவருடைய ஐந்து மாடுகள் இறந்தால், அதன் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.
-(3)




