மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் மட்டுமே: பிள்ளையான், வியாழேந்திரன் வெற்றி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்களை பெற்றுள்ளது. கடத்த முறை 4 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில் இம்முறை 2 ஆசனங்களை இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மு.காங்கிரஸ், பொதுஜன பெரமுன ஆகிய தரப்பினர் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சி பெற்ற வாக்குகள் 79,460 வாக்குகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 67,692, முஸ்லிம் காங்கிரஸ் 34,428, பொதுஜன பெரமுன 33,420 வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஹிஸ்புல்லா தரப்பு 31,054, தேசிய மக்கள் சக்தி 28,362 ஆசனங்களை பெற்றனர். ஆசனம் பெற முடியவில்லை.
தமிழ் அரசு கட்சி சார்பில் இரா.சாணக்கியன், கோவிந்தம் கருணாகரன், பெரமுன சார்பில் வியாழேந்திரன், மு.கா சார்பில் நசீர் அஹமட் ஆகியோர் தெரிவாகியுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.




