மட்டக்களப்பில் போதைப்பொருளை வழங்கி பாடசாலை மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய உயர்தர மாணவர் இருவர் கைது
மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மாணவியின் காதலன் என குறிப்பிடும் ஒருவரும் அவரின் நண்பரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பாடசாலை மாணவிக்கு போதைப்பொருளை வழங்கி, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.(15)




