மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் வேலணை கடற்கரையில் கைது
இந்தியா மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் வேலணை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர்கள் இருவரும் இலங்கையில் இருந்து சென்று இந்தியா மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை இருவரும் அங்கிருந்து தப்பித்து கடல் மார்க்கமாக மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர். இதன்போது இலங்கை கடற்படையினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.(15)




