மத்தள விமான நிலையத்திற்கு சர்வதேச விமான சேவை!
ரஷ்யாவின் ”ரெட் விங்ஸ்”(Red Wings) விமான சேவை இன்று(29) முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
‘ரெட் விங்ஸ்’ விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று இன்று(29) மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், வாரத்திற்கு இரு தடவைகள் இலங்கைக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த விமானத்தில் 404 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
”ரெட் விங்ஸ்” நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை மூன்றாகும்.
-(3)




