மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு பொருத்தமானவர் இந்திரஜித்தே: அவர் புலிகளை ஆதரித்தவருமல்ல தமிழ் தேசிய கொள்கைகள் மீது அக்கறை உள்ளவருமல்ல
கொழும்பு டெலிக்ராபில் தயான் ஜயதிலக்க எழுதிய கட்டுரை
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமனம் தீர்க்கரமானதொன்று, உறுதியாக வெளிப்படையாக பாராட்டப்பட வேண்டிய முடிவு இது.
இது தார்மீக விடயம்,மேலும் விழுமியங்கள் தொடர்பான விடயம். இது ஓழுக்கநெறி சார்ந்த விடயம், ஓருவர் எவ்வாறுநடந்துகொள்ளவேண்டும், நடந்துகொள்ள கூடாது என்பதுடன் தொடர்புபட்ட விடயம். இறுதியாக இது அடிப்படை நாகாரீகத்துடன் தொடர்புபட்ட விடயம்.
இந்த நாட்டை பொறுத்தவரை பெரும் பிரச்சினையென்னவென்றால் அது உண்மையான தகுதியிலிருந்த விலகிச்செல்வதாகும், (நிபுணத்துவம் மற்றும் திறமை)தகுதிகுறித்த கொள்கையே முக்கியமான அளவுகோல். தகுதிக்கான அளவுகோல் என்ற அடிப்படையில் பார்த்தால் போட்டியில் முன்னணியில் இருப்பவர் இந்திஜித் குமாரசுவாமி. அவரிற்கு அடுத்த இடத்தில் பொருளாதார நிபுணர் சமன்கெலகமே காணப்படுகின்றார்.
இலங்கை பாராளுமன்றத்தின் கூட்டு எதிர்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன, முன்னைய ஆளுநரிற்கு பதில் இந்திரஜித்தை நியமித்ததை வரவேற்றுள்ளார். இதன் மூலம் அவர் தனது அரசியல்நாகரீகத்தை, பண்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை கூட்டு எதிர்கட்சியில் உள்ள சில சக்திகள் இந்த நியமனம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களை மறைமுகஇனவாதம் என்றே வர்ணிக்க முடியும்.
விதுரவிக்கிரமநாயக்கவும், வாசுதேவ நாணயக்காரவும் தினேஸ் குணவர்த்தன எடுத்துள்ள நிலைப்பாட்டை பின்பற்றியுள்ளனர். இவர்கள் ஐக்கியதேசிய கட்சி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு முற்போக்கு பின்னணியை கொண்டவர்கள்.
இந்திரஜித் சில பிழையான அனுமானங்களின் அடிப்படையில் ராஜ்ராஜரட்டினத்தின் நிறுவனத்துடன் தொடர்புகளை பேணியிருக்கலாம். சந்தேகத்திற்கு இடமின்றி ராஜ் ராஜரட்டினம் விடுதலைப்புலிகளிற்கு நிதி வழங்கியவர், அவர் நிச்சயமாக ஓரு கேடி.
கலியோன் தொடர்புகள் குறித்து எனக்கு தெரியாது. இந்திரஜித் அது குறித்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என கருதுகிறேன். அல்லது பராளுமன்றத்தில் அவர் விசாரிக்கப்படலாம். எனினும் அவர் ஓரு கௌரவமான பாடசாலை மாணவனாக விளங்கியதை கருத்தில்கொள்ளும்போது அவரது அப்பாவித்தனமே அந்த தொடர்புகளிற்கு காரணமாகயிருந்திருக்கலாம் எனகருதுகின்றேன்.
எனினும் ஒருவரை மதிப்பிடுவதற்கு அல்லது தீர்ப்பிடுவதற்கு ஒருவர் யாருடன் தொடர்புவைத்திருந்தார் என்பது மாத்திரம் போதுமானதல்ல என்பது என் கருத்து . கலியோன் மற்றும் ராஜரத்தினத்துடனான தொடர்பு என்பதே இந்திரஜித்தை பொறுத்தவரை முக்கியமான விடயமும் இல்லை.
மேலும் தொழில்சார் நிபுணர்கள்,கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளை பொறுத்தவரை அவர்கள் யாருடன் தொடர்புவைத்துள்ளனர் என்பது முக்கிய தகுதியில்லை, மாறாக அவர்களது தொழில்சார் உற்பத்தி,செயற்திறன்- அவர்களது புத்திக்கூர்மை, அவர்கள் வழங்கும் நிபுணத்துவம்,போன்றவற்றையே முக்கியமாக கருதவேண்டும்.
எனினும் மூன்று தசாப்தங்களாக இந்திரஜித்தை அறிந்தவன் என்ற வகையில் அவர் ஓருபோதும் விடுதலைப்புலிகள் குறித்து அனுதாபத்தை கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் தெரிவிக்க முடியும்.
அதேபோன்று பிரிவினைவாதம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகள் போன்றவற்றிலும் அவர் ஆர்வம்கொண்டிருக்கவில்லை. தமிழ் தேசிய கொள்கைகள் குறித்து பொதுவாகவே அவர் அக்கறையையும், அனுதாபத்தையும் கொண்டிருக்கவில்லை.
அவர் இளம்வயதில் மார்க்சிசத்தில் ஆர்வம் காட்டியதும், நகர்ப்புற வாழ்க்கையும், சமூக பின்னணியும் 1983 இனக்கலவரத்தின் பின்னரும் இனஅடையாளம்குறித்து ஆர்வமற்றவராக அவரை மாற்றியிருந்தது.
இன அடையாள அரசியல் மற்றும் கொள்கைக்கு எதிரானவராகவே அவர் காணப்பட்டார். 2015 இல் அர்ஜூன மகேந்திரனின் நியமனம் குறித்து சர்ச்சைகள் எழுந்தவேளை நான் இந்திரஜித் குமாரசுவாமியே அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என தொலைக்காட்சிப்பேட்டிகளில் தெரிவித்திருந்தேன். மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்டக்கூடியவர்களின் பட்டியலில் அவர் அவ்வேளை காணப்பட்டார். எனினும் பிரதமரின் இறுதி முடிவு வேறு மாதிரியானதாக காணப்பட்டது.
ஓரு வருடத்திற்கு பின்னர் நான் வெளிப்படையாக ஆதரித்த நபரை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது. தகுதியின் அடிப்படையில் நியமனம் என்பது பின்பற்றப்பட்டுள்ளது. வாமாசேன ராசபுத்திரம் மற்றும் தேசமான்ய ஏஎஸ் ஜெயவர்த்தனவிற்கு பின்னர் இந்திரஜித் குமாரசுவாமி போன்ற பொருத்தமான , தகுதிவாய்ந்த அறிவுத்திறனை கொண்ட ஓருவர் மத்திய வங்கி அளுநராக பதவிவகிக்கவில்லை.
பிரதமர் இறுதிவரை மகேந்திரனிற்காக பிடிவாதம் பிடித்தார். அதன் பின்னர் தனது நீண்ட கால விசுவாசியும், தனது பள்ளித்தோழனுமான சரித்தரத்வத்தையை நியமிக்க முயன்றார். அனைத்து பாராட்டுகளும் ஜனாதிபதிக்கே செல்லவேண்டும். மேலும் இந்த விடயத்தில் பங்களிப்பு ஆற்றியிருந்தால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பாராட்டப்படவேண்டியவரே.
முக்கியமான பொருளதார கொள்கைகளை கருத்தில்கொண்டாலும் இலங்கையின் மத்தியவங்கியின் தலைமைப்பொறுப்பில் இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திரஜித்தே. தற்போதைய அரசாங்கத்திற்குள் சீனாவின் பொருளாதார முக்கியத்துவத்தை கலாநிதி சரத்அமுனுகமவினாலும் ( வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர்) மகிந்த சமரசிங்கவினாலும், இந்திரஜித் குமாரசுவாமியாலுமே புரிந்துகொள்ள முடியும்.




