செய்திகள்

மனிதநேயத்திற்கு தொலைச்செல்லிப் பிரதிமைத்தொழில்நுட்பம்

மருத்துவர்.சி.யமுனாநந்தா
ஒரு துணிக்கையின் தகவல்களை கடத்தும் நவீன தொழில்நுட்பமாக (Teleportation- தொலைச்செல்லி) அமைந்து உள்ளது. மீசிறிய அணுத் துணிக்கையின் குவாண்டம் நிலையினை பிரதி செய்து தூர அனுப்புவதில் சீன நாட்டு விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றி கண்டுள்ளனர். சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இத் தொழில்நுட்பத்தின் சாத்தியத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Ji. Gang Ren தலைமையிலான விஞ்ஞானிகள் தீபெத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் இருந்து தொலைச்செல்லிச் செயன்முறையை பூமியை சுற்றி வருகின்ற சீனச் செய்மதியான Micius இற்கு நிகழ்த்தி இருந்தனர். இதன்போது ஆய்வுகூடத்தில் இருந்து செக்கனுக்கு 4000 சோடி போட்டோன்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு சோடி போட்டோன்களில் ஒன்று 1400km தொலைவில் உள்ள Micius செய்மதிக்கு அனுப்பப்பட்டது. செய்மதியில் உள்ள ஞரயவெரஅ குவாண்டம் உணரும் கருவியின் மூலம் இவை அவதானிக்கப்பட்டன. இதன்போது பூமியில் உள்ள மீசிறிய நுண்துணிக்கைபோல் (Photon) செய்மதியில் உள்ள சுற்றில் உருவாக்கப்பட்டது. இச் செயன்முறையே தொலைச்செல்லியின் Teleportation அடிப்படையாகும்

குவாண்டம் சக்திப் பரிமாற்றத்தினை கணணிகளில் பயன்படுத்தும் முயற்சிகளுக்கு இது ஒரு புதிய மைல்கல் ஆகும். துணிக்கையின் குவாண்டம் நிலையினை பிரதி செய்து அனுப்புகின்ற தொலைச்செல்லித் தொழில் நுட்பத்தினால் குவாண்டம் கணிணிகளின் தரவு நிலைகளான (Quibits) நிலைக்குத்து – நிலைக்குத்து, கிடை-கிடை, நிலைக்குத்து-கிடை, கிடை-நிலைக்குத்து என நான்கு சக்தி நிலைகளில் தகவல்களை செயற்படுத்தலாம்.

(gel effect)

உலகில் முதன்முதலாக ‘குவாண்டம் இணைய’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடந்த வருடம் சீனா விண்ணுக்கு செலுத்திய Micius செய்மதி 

எனவே Teleportation தொலைச்செல்லி தகவல் தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகின்றது. தற்போதைய ஆய்வுநிலையில் இதன் மூலம் குவாண்டம் இணையத்தை (Quantum internet) மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உருவாக்கமுடியும். இது பொருளாதாரத் தகவல்களைப் பரிமாறவும், இராணுவத் தகவல்களைப் பேணவும், தேர்தல் தகவல்களைக் கண்காணிக்கவும், உளவுத் தகவல்களைப் பேணவும் உதவும். (Encrypted information) தற்போதைய இணையத்தில் உள்ள ஊடுருவல்கள், குவாண்டம் இணையத்தில் ஏற்படுத்த முடியாது. குவாண்டம் இணையத்தின் வளர்ச்சியானது அகிலத்தின் தகவல் தொடர்புகளையும் புதிய பரிமாணத்தில் கொண்டு வரும்.

அடுத்து மருத்துவத்துறையில் குவாண்டம் இணையத்தின் மூலம் அதாவது மூளையின் நரம்புக்கலங்களின் செயல்நிலையை தொலைச்செல்லி மூலம் (Teleportation) பிரதி எடுத்து, அதனை மீளவும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்படலாம். இதனால் மூளை இறப்பு ஏற்பட்ட (Brain death) நோயாளிகளின் மூளை நரம்புக் கலங்களின் செயற்பாட்டு பிரதிமை, தொலைச்செல்லி மூலம் அணுகப்பட்டிருந்தால், மீளவும் அவர்களின் மூளைச் செயற்பாட்டை ஏற்படுத்தி, இறந்தவர்களையும் உயிர்பிக்க முடியும்.