“மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது”: கனேடிய பிரதமர்
மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்லாயிரம் வருடங்களாக சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்த நாட்டு மக்களை அரசியல் பேராசையால் பிளவுபடுத்தி, பேரவலம் நடந்தேறிய கறுப்பு ஜூலை இடம்பெற்று 40 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளதாகவும் கனேடிய பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் கனேடியர்களுடனும் உலகமெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடனும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, தப்பிப்பிழைத்தோரை கௌரவிப்பதுடன், வன்முறைக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பதற்கு உறுதியாக இருப்பதை மீள வலியுறுத்துவதாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-(3)




