செய்திகள்

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்

5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் பல பகுதிகளுக்கு சென்று நிலமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன் அரசியல் கட்சிகளின் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்ததுடன் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரிவினருடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

இதேவேளை நேற்று மாலை கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விசேட விமானம் மூலம் அவர் நாடு திரும்பியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.