செய்திகள்

மனித உரிமை பேரவையிலிருந்து ரஸ்யா வெளியேற்றப்பட்டது

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையிலிருந்து ரஸ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான 14 உறுப்பினர்களை தெரிவுசெய்த வேளை ஐக்கியநாடுகள் சபை ரஸ்யாவை நிராகரித்துள்ளது.

குறிப்பிட்ட வாக்களிப்பின்போது ரஸ்யாவிற்கு 112 வாக்குகள் மாத்திரே கிடைத்துள்ளன.

சிரியாவில் ரஸ்யா மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்களிற்கான எதிர்ப்பு வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்டள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வாக்களிப்பிற்கு முன்னதாக மனித உரிமை ஆர்வலர்கள் ரஸயாவை நிராகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.