செய்திகள்

மனித கொலைகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் கைது செய்யப்பட வேண்டியவர்களே : அமைச்சரவை பேச்சாளர்

இராணுவத்தில் ஒரு குழு யுத்தம் செய்ததை போன்று மற்றுமொரு குழு மனித கொலைகளில் ஈடுபட்டதாகவும் இவ்வாறாக மனித கொலைகளில் ஈடுபட்ட இராணுவத்தினரை கைது செய்ய வேண்டுமென அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியார் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரினால் இராணுவத்தினர் தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் ஒரு குழு யுத்தம் செய்ததை போன்று மற்றுமொரு குழு மனித கொலைகளில் ஈடுபட்டதாகவும் இவ்வாறாக மனித கொலைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். எக்னலிகொட உள்ளிட்டோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் அப்படியென்றால் அதனை சரியென ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது தானே. இதன்படி சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)